குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஊட்டச்சத்து மிக்க மாவட்டமாக உருவாக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், முன்பருவக் கல்வி குழந்தைகளின் வருகை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவேண்டும். சுகாதார துறையுடன் இணைந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வேண்டும். மேலும் இணை உணவு பெறும் பயனாளிகளான கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு 100 சதவீதம் இணை உணவு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊட்டச்சத்து நடவடிக்கைகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஊட்டச்சத்து மிக்க மாவட்டமாக உருவாக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.