மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமிற்கு தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் இளங்கோ, சசிரேகா, ரமேஷ் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். தொடர்ந்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு மன்ற செயலாளர் செந்தில்குமார் செய்திருந்தார். ஆசிரியர் திருவிக்ரமன் நன்றி கூறினார்.
16-Aug-2025