உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலை விரிவாக்கப் பணி கோட்ட பொறியாளர் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணி கோட்ட பொறியாளர் ஆய்வு

சங்கராபுரம்,: கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை விரிவாக்கப் பணியை கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை 18 கி.மீ., துாரத்திற்கு இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக பாலம் கட்டும் பணி, மின் கம்பங்கள் மாற்றி அமைத்தல். மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.இப்பணிகளை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் நாகராஜன் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் போடப்படும் தார் சாலை குறித்து அளவீடு மற்றும் தரமாக போடப்படுகிறதா என ஆய்வு செய்தார்.ஆய்வின்போது தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியன், உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், சங்கராபுரம் உதவி பொறியாளர்கள் மணிவண்ணன், அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ