உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீயணைப்பு வீரர்களுக்கு ரோட்டரி கிளப் பாராட்டு

தீயணைப்பு வீரர்களுக்கு ரோட்டரி கிளப் பாராட்டு

திருக்கோவிலுார்: வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்ட, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி, தேவனுார் , அரகண்டநல்லுார் பகுதிகளை கடந்த 2ம் தேதி வெள்ளம் சூழ்ந்தது. மிகுந்த பாதிப்பிற்கு உள்ளான இப்பகுதி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு விழா நடந்தது.ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் வாசன், செயலாளர் கோதம்சந்த் ஆகியோர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் இருசம்மாள் உள்ளிட்ட பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.மீட்பு குழுவினரின் வீர தீர செயல்கள் குறித்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, கல்யாணகுமார், கார்த்திக், ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி