உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் பெட்டியில் இருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு

பைக் பெட்டியில் இருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பைக் கில் வைத்திருந்த ரூ.55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச் சந்திரன், 50; கேபிள் டி.வி., ஆப்பரேட்டர்.இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்த ரூ.55 ஆயிரத்தை, பைக் பெட்டிக்குள் வைத்து, சங்கராபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றார்.அங்கு பைக்கை நிறுத்தி விட்டு, வங்கி உள்ளே சென்றவர், சிறிது நேரம் கழித்து மீண்டும் திரும்பி வந்து பார்த்தார்.அப்போது, பைக் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.மர்ம நபர்கள் பைக் பெட்டியை கள்ளச்சாவி போட்டு திறந்து, பணத்தை திருடி சென்றது தெரிந்தது.இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ