உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலி நகை கொடுத்து ரூ. 60 ஆயிரம் மோசடி: மர்ம பெண்ணுக்கு வலை

போலி நகை கொடுத்து ரூ. 60 ஆயிரம் மோசடி: மர்ம பெண்ணுக்கு வலை

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே தங்க மூலாம் பூசிய போலி நகையை கொடுத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த பணத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் ஜெயச்சந்திரன் 40. இவர் உளுந்தூர்பேட்டை, அடுத்த கெடிலத்தில் ஸ்ரீ தேசிகா ஜுவல்லரி நகை அடகு கடை வைத்துள்ளார்.இவரது கடைக்கு கடந்த 31ம் தேதி மதியம், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்றார். நகையை விற்று பணம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு முன் அந்தப் பெண் கடைக்கு வந்ததில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெயச்சந்திரன், அடையாள அட்டை ஏதேனும் இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் அருகே உள்ள பரிக்கல் கிராமத்தில் உள்ள முகவரி கொண்ட புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையை கொடுத்துள்ளார். அதனை நம்பிய ஜெயச்சந்திரன் அந்தப் பெண் கொடுத்த 12 கிராம் நகையை வாங்கிக் கொண்டு 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் ஜெயச்சந்திரன் அந்த நகையை உருக்குவதற்காக மொத்த வியாபாரிடம் கொடுத்தார். அப்போது நகையை பரிசோதித்த போது, செப்புவை தங்க மூலாம் பூசி ஏமாற்றியது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயச்சந்திரன், திருநாவலுார் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் கொடுத்த ஆதார் அட்டையில் உள்ள முகவரி குறித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், போலி முகவரியில், போலியான ஆதார் அட்டை கொடுத்துள்ளது தெரியவந்தது. மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !