மேலும் செய்திகள்
திருநங்கைகளுக்கு கல்வி சிறப்பு முகாம்
15-Jun-2025
கள்ளக்குறிச்சி: திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்டோர் உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த செய்திக்குறிப்பு :மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் திருநங்கை திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்டோர் உயர்கல்வி படிக்க, மாதந்தோறும் ரூ.1000 உதவித்தெகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கல்வித்தகுதியாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அரசு அறிவிப்பின்படி இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லுாரியில் சான்றாக சமர்ப்பித்து, 2025-2026 கல்வியாண்டு முதல் பயன்பெறலாம்.
15-Jun-2025