உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

மாணவர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக தொழிற்கல்வி படிப்புகள் பொறியியல், மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங், சித்த மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, சட்டம் ஆகியவற்றில் சேர்க்கை பெற்று கல்லுாரிகளில் பயின்று வரும் ஏழை மாணவர்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுலக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 ஆயிரம் ரூபாய் அரசு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை