மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு கலெக்டர் அறிவுரை
04-Jun-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர மாவட்ட வருவாய் நிர்வாகக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த்தலைமை தாங்கினார்.மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் பொதுமக்களின் நலனுக்காக வழங்கப்பட்டு வரும் சேவைகள்குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் அவர் ஆய்வு நடத்தினார். அதன்படி பட்டா மாற்றம்,உட்பிரிவு பட்டா மாற்றம், முழுபுலம் பட்டா மாற்றம், புதிய பட்டா வழங்குதல், நீண்டகால நிலுவை கோப்புகள்மற்றும் தீர்வுகள், நிலவகை மாற்றம், இலவச வீட்டுமனை ஒப்படை, வருவாய் வசூல் சட்டத்தின்கீழ் வசூல்செய்யப்பட வேண்டிய இனங்கள், சிறப்பு வரன் முறைப்படுத்தி பட்டா வழங்குதல், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.வருவாய்த்துறை சார்ந்த நிலுவைப் பணிகளை விரைவாக முடிக்கவும், நீண்ட கால நிலுவை கோப்புகளுக்கு தீர்வு காணவும், சிறப்பு வரன்முறை பட்டா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் வருவாய்த்துறைதொடர்பான சேவைகள் தகுதியுள்ள பயனாளிகளை முறையாக சென்று சேருவதை தொடர்ந்து உறுதி செய்யவும், உரியநடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த் குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
04-Jun-2025