உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கடும் வறட்சி, தீவன தட்டுப்பாட்டால் விவசாயிகள்... வேதனை; கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் அவலம்

கடும் வறட்சி, தீவன தட்டுப்பாட்டால் விவசாயிகள்... வேதனை; கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் அவலம்

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் கடும் வறட்சி காரணமாகவும், கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காததாலும் கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் விற்க தொடங்கியுள்ளனர்.சங்கராபுரம் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால், விவசாயிகளுக்கு, தங்கள் கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு, நெல் அறுவடை சமயத்தில் தேவையான வைக்கோலை வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம்.கடந்த 2 ஆண்டுகளாக சங்கராபுரம் பகுதியில் நெல் அறுவடை சமயத்தில் சேலம், பெங்களூரு, ஓசூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கராபுரம் பகுதிக்கு வந்து வைக்கோலை அறுவடை செய்யும் நாளிலேயே இந்திரம் மூலம் ரோலாக சுற்றி அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் சில மாதங்களாக வைக்ேகாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும், வறட்சி காரணமாக புற்களும் கருகி வருவதால், புல், வைக்கோலை தீவனமாக கொடுத்து வளர்த்து வந்த கால்நடை விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் தீவனம் எதிர்பார்க்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், கால்நடைகளை சங்கராபுரம் அடுத்த அத்தியூரில் நடக்கும் வார சந்தையில் விற்கத் தொடங்கியுள்ளனர்.ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அத்தியூரில் நடக்கும் வார சந்தையில் குறைந்தது 500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.கிராமங்களில் உள்ள விவசாயிகள் 4 முதல் 5 கறவை மாடுகளை வாங்கி உள்ளூரில் உள்ள பால் ஸ்டோரில் பாலை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர். வறட்சி, தீவன தட்டுப்பாடு காரணமாக மாடுகளை வைத்து பராமரிக்க இயலாத சூழலில் கறவை மாடுகளை விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கிராமங்களில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்