உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் குறு மைய விளையாட்டு போட்டி துவக்கம்

திருக்கோவிலுாரில் குறு மைய விளையாட்டு போட்டி துவக்கம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் குறு மைய அளவிலான 2025 - 26ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கின. தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மாணவர்களுக்கான போட்டியை துவக்கி வைத்தார். முதற்கட்டமாக திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி விளையாட்டு மைதானம் மற்றும் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானங்களில் கபடி, கோகோ, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகிறது. உடற்கல்வி இயக்குனர்கள் பாலாஜி, ஹரிஹரன் மேற்பார்வையில், உடற்கல்வி ஆசிரியர்கள் மலர்கொடி, முருகவேல், சரவணன், சண்முகம், ஸ்ரீராமுலு ஆகியோர் முன்னின்று நடத்தி வருகின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை