விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த உலகலப்பாடி கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் பிளோணினாள் இருதயராஜ் தலைமை தாங்கினார். வேளாண் பொறியியல் துறை அலுவலர் கிருத்திகா, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கான நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பம் குறித்து விளக்கினார். வேளாண் வணிகத்துறை அலுவலர் சதீஷ் மன்னன் உரச் செலவை குறைத்து, இயற்கை விவசாயத்தை மேம்படுத்தி விளைபொருட்களை மதிப்பு கூட்டி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக பேசினார்.உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் சந்துரு கலந்து கொண்டு உயிர் உரங்கள் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.