உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் உள்ளிட்ட மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கடந்த ஆக., மாதம் நடந்தது. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னேசலம், எலவனாசூர்கோட்டை, திருக்கோவிலுார் ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி விளையாட்டு மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சதுரங்கம், கால்பந்து, இறகுபந்து கைபந்து, எரிபந்து, கோ-கோ, டென்னிஸ், ஹாக்கி, வாலிபால், கபடி, பேஸ்கட்பால், டேபிள் டென்னிஸ் மற்றும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் எலவனாசூர்கோட்டை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வாலிபால், ஹாக்கி, எரிபந்து போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி