உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொரசக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பொரசக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தியாகதுருகம்; பொரசக்குறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. அரசு பள்ளியில் நடந்த முகாமிற்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் பசுபதி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணைச்சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஓ., க்கள் கொளஞ்சிவேல், மோகன் முன்னிலை வகித்தனர். முகாமை துவக்கி வைத்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். பொரசக்குறிச்சி, கணங்கூர், வேளாக்குறிச்சி, வரஞ்சரம் ஆகிய 4 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினர். ஊராட்சி தலைவர்கள் லட்சுமி, ராணி, சந்திரலேகா, சுஜாதா, ஒன்றிய கவுன்சிலர் பிச்சையம்மாள், மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள், தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், மணி, சுப்பு இளங்கோவன், கணேசன், கலியன், பழனிசாமி, பாலு, செந்தில் குமார், அப்துல் கபூர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ