மேலும் செய்திகள்
சங்கராபுரம் ரோட்டரி சங்க மருத்துவர் தின விழா
03-Jul-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முதற்கட்ட முகாமிற்கு, பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆஷாபீ முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சங்கரன் வரவேற்றார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் துணை கலெக்டர் கீதா, தாசில்தார் விஜயன், தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் கதிரவன், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முகாமில் 684 மனுக்கள் பெறப்பட்டது. மின் வாரிய சார்பில் பெறப்பட்ட 4 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.
03-Jul-2025