உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மணம்பூண்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

மணம்பூண்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திருக்கோவிலுார்: முகையூர் ஒன்றியம், மணம்பூண்டி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் தயாளன் வரவேற்றார். கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து, சமூக நலத்துறை தனி தாசில்தார் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வளர்மதி தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்து மனுக்களை பெற்றார். பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்தரன், ஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். வருவாய்த்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை