மேலும் செய்திகள்
சிலம்பம் சுற்றி அசத்திய மாநகராட்சி மாணவியர்
30-Jan-2026
கள்ளக்குறிச்சி: மிட்டாய் என நினைத்து, மாத்திரைகளை சாப்பிட்ட, அரசு பள்ளி மாணவியர் 6 பேர், மயக்க மடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த சிறுமங்கலத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி மகள் லத்திஷா, 6. இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் லத்திஷா, தன் வீ ட்டிலிருந்து, மறதி நோய்க்கு சாப்பிடும் 15 மாத்திரைகள், பெயர் தெரியாத 10 மாத்திரைகள் ஆகியவற்றை பள்ளிக்கு எடுத்து சென்றுள்ளார். பள்ளியில், லத்திஷா, உடன் பயிலும் மாணவியரான ரிஷகாதேவி, 6, இந்துஷா, 6, விஷ்மிதா, 7, ரஷ்மிதா, 8, புஷ்பலதா, 7; ஆகியோர் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற மாணவியர் தங்களுக்கு மயக்கம் வருவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர்,கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Jan-2026