மேலும் செய்திகள்
மழை ஓயவில்லை; பயணத்திற்கும் ஓய்வில்லை
13-Dec-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்த நிலையில் வழக்கம்போல் பள்ளி, கல்லுாரிகள் இயங்கியதால் மாணவ, மாணவியர் கடும் அவதியடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்படும் என, மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளி, கல்லுாரி இயங்கும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.இதனால் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லுாரிக்கு சென்று வந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் மாணவ, மாணவியர் பலர் மழைக்கு ஒதுங்கியும், குடைகள் பிடித்தவாறு பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருந்து சென்றனர். பலத்த மழையில் பள்ளி, கல்லுாரிகள் இயங்கியதால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
13-Dec-2024