உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

தியாகதுருகம்; சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று, ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடக்கிறது. பங்குனி மாத அமாவாசையையொட்டி, மணிமுக்தா ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. இரவு உற்சவர் அம்மனுக்கு, சர்வ அலங்காரத்தில், ஊஞ்சலில் தாலாட்டு பாடி ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ