உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு கல்லூரியில் தமிழ் மன்ற விழா

அரசு கல்லூரியில் தமிழ் மன்ற விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு கலை கல்லூரியில், தமிழ் மன்ற விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ் துறை மூன்றாம் ஆண்டு, மன்ற விழா நடந்தது. பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார். முதல்வர் மகா விஷ்ணு தலைமை தாங்கினார்.கவிஞர் மனுஷி, நல்லவன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பரதன், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.பேராசிரியர்கள் ஸ்ரீதர், ராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிறைவாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !