உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேர்தலில் ஓட்டு கேட்டு வருபவர்களிடம் பஞ்சமி நிலத்தை மீட்டு தர சொல்லுங்கள் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேச்சு

தேர்தலில் ஓட்டு கேட்டு வருபவர்களிடம் பஞ்சமி நிலத்தை மீட்டு தர சொல்லுங்கள் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேச்சு

கள்ளக்குறிச்சி பஞ்சமி நிலம் மீட்பு பயணக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது.சமூக சமத்துவப் படை கட்சி மாவட்ட தலைவர் மார்கண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், அம்பேத்கர் மக்கள் இயக்க வேடியப்பன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், சமூக சமத்துவப் படை கட்சி நிறுவனத் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பங்கேற்று பேசியதாவது:தமிழ்நாட்டில் 12.5 லட்சம் ஏக்கர் நிலம் பஞ்சமர் என்று அழைக்கப்படும் பட்டியல் இன மக்களுக்கு பஞ்சமி நிலம் என வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 132 ஆண்டுகளாக அந்த நிலங்களை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.எனவே பெண்கள் அனைவரும் உங்களின் வீட்டிற்கு ஓட்டு கேட்டு வருபவர்களிடம், உங்களுக்கு உரித்தான பஞ்சமி நிலத்தை மீட்டு தர சொல்லுங்கள்' என்றார்.கூட்டத்தில் சமூக சமத்துவப் படை கட்சி மாநில செயலாளர்கள் மோகன்ராஜ், கோகுல்சுவாமிநாதன், மணிமேகலை, மாசிலாமணி, அலுவலக செயலாளர் தயாளன், மாநில மகளிரணி செயலாளர் நிர்மலாதேவி, எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். செல்வராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி