உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேகளீசபெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிப்பு

தேகளீசபெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிப்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் நிறைவாக தேகளீச பெருமாள் கண்ணாடி அறையில் அருள்பாலித்தார்.திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவ நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு தாயார், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஒரே கேடயத்தில் எழுந்தருளி பக்தி உலா நடந்தது. 8:00 மணிக்கு கண்ணாடி அறையில் எழுந்தருளி திவ்யபிரபந்த துவக்கம், சேவை சாற்றுமறை, பெருமாள், தாயார் கண்ணாடி அறையில் சயன கோலத்தில் அருள்பாலித்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு தாயார் பெருமாள் ஒரே கடையத்தில் புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில், விழா ஏற்பாடுகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !