உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்குறள் ஒப்பித்தல் போட்டி 

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி 

சங்கராபுரம்; சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பாக திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உலக திருக்குறள் பேரவை நிறுவனர் பாஸ்கர், பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி துரை, அ.-பாண்டலம் தலைவர் பாப்பாத்தி நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு திருக்குறளின் அவசியம் குறித்து எடுத்துக் கூறினர். ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டு, பரிசினையும், பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியினை ஆசிரியர்கள் கதிரவன், இணையத்துல்லா ஒருங்கிணைத்தனர். ஆசிரியை அன்புக்கரசி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ