உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருவள்ளுவர் தின விழா..

திருவள்ளுவர் தின விழா..

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் திருக்குறள் கழக அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.அறக்கட்டளை தலைவர் உதியன் தலைமை தாங்கினார். கோவல் தமிழ் சங்க துணைத் தலைவர் பாரதி மணாலன் வரவேற்றார். பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் காபிசுப்பிரமணியன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் கலியபெருமாள், முன்னாள் ராணுவ வீரர் கல்யாண் குமார், தமிழ் சங்க துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அறக்கட்டளையின் பொருளாளர் அருள்மொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருக்குறளில் அறம் என்ற தலைப்பில் தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு பேசினர். அறக்கட்டளை அறங்காவலர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை