உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புகையிலை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

புகையிலை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜா வரவேற்றார்.தமிழ்த்துறை உதவி பேராசிரியை சுபலட்சுமி உறுதிமொழி வாசித்தார். அதில், புகையிலை மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை அனைவரும் அறிவோம். நமக்கு தெரிந்த தகவல், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள், உடல்நல பிரச்னைகள் குறித்து பிறருக் கும் தெரிவிக்க வேண்டும்.குறிப்பாக, போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு தெரியப்படுத்தி அவர் களது குடும்பத்தை காப்பாற்றுவோம் என உறுதி மொழியேற்கப்பட்டது.இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரேம்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி