கள்ளக்குறிச்சியில் இன்று மருந்து வணிகர் சங்க விழா
சங்கராபுரம் கள்ளக்குறிச்சியில் மருந்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று 15ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட மருந்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம், மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு ஆகிய முப்பெரும் விழா இன்று 15ம் தேதி வி.ஏ.எஸ்., மண்டபத்தில் நடக்கிறது.நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்குகிறார். மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கிறார். செயலாளர் மதியழகன் வரவேற்கிறார்.நிகழ்ச்சியில், மாநில தலைவர் ரமேஷ், செயலாளர் செல்வன், பொருளாளர் அன்பழகன், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.