உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டியூஷன் சென்டர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்

டியூஷன் சென்டர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் டியூஷன் சென்டர்கள் சங்க மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாநில தலைவர் விவேக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜா, செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். சட்ட ஆலோசகர் குமரன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட தலைவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சங்க வளர்ச்சிப் பணிகள், ஆண்டு திட்ட செயல்பாடுகள், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களுக்கும் பதிவு சான்றிதழ், உறுப்பினர் அடையாள அட்டை, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு பொறுப்பு நியமன ஆணை வழங்கப்பட்டது. மாநில துணை செயலாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ