மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது
01-Jul-2025
சின்னசேலம் : நயினார்பாளையம் அருகே காரில் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில வாலிபர்கள் இருவரை கைது செய்த போலீசார், 210 கிலோ பறிமுதல் செய்தனர்.கீழ்க்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலை நயினார்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வெளி மாநில பதிவெண் மகேந்திரா தார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 14 வெள்ளை சாக்கு பைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 210 கிலோ ஹான்ஸ் குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.போலீஸ் விசாரணையில், காரில் குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகளை கடத்தி வந்தது, ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம், ராவ்லிநடி பகுதியைச் சேர்ந்த தேவராம் மகன் சுக்காராம், 20; உதராம் மகன் தோராம், 25; என்பதும், இருவரும் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதி கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. கீழ்க்குப்பம் போலீசார் இருவரையும் கைது செய்த கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
01-Jul-2025