மேலும் செய்திகள்
ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
20-Oct-2024
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை வார சந்தையில் 1.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. உளுந்துார்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆடு வார சந்தை நடப்பது வழக்கம். பண்டிகை காலங்களில் ஆடுகளின் வரத்து அதிகரிப்பதோடு விலையும் அதிகமாகவே இருக்கும். தற்போது புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாசம் துவங்கியதை தொடர்ந்தும், தீபாவளி பண்டிகையையொட்டியும் ஆடுகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. ஆடுகளின் விலையும் அதிகரித்ததால் ஆட்டின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு ஆட்டின் விலை 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று அதிக வியாபாரிகள் ஆடுகளை வாங்க வந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானது. 1.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
20-Oct-2024