உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வி.சி., மகளிர் மாநாட்டுக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

வி.சி., மகளிர் மாநாட்டுக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை வி.சி., மது ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டையில் வி.சி., வின் மது ஒழிப்பு மகளிர் மாநாடு வரும் 2ம் தேதி கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு நேற்று வேத மந்திரங்கள் முழங்க பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் பழனியம்மாள், பொதுசெயலாளரின் தனி செயலாளர் தயாளன், மாவட்ட செயலாளர் மதியழகன், மண்டல துணை செயலாளர் பொன்னிவளவன், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், சங்கீதா, நகர செயலாளர் வசந்தன், ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் ஆதிசுரேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் கனக அம்பேத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ