உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேதவல்லி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா  

வேதவல்லி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா  

சின்னசேலம் : சின்னசேலம் விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்கள் பலர் தேர்வடம் பிடித்தனர். சின்னசேலம் விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஜூலை 24 ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தேர் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து தேரில் எழுந்தருள செய்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர். நேற்று ஊஞ்சல் உற்சவத்துடன் தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ