கட்டணமின்றி பயணித்த வாகனங்கள்
உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் நேற்று மாலை, அதிக அளவில் வாகனங்கள் வந்ததால், நீண்ட துாரம் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த எஸ்.பி., மோகன் சம்பவ இடத்திற்கு வந்து, சுங்க கட்டணம் வசூலிப்பை நிறுத்தி, வாகனங்கள் விரைவாக செல்ல ஏற்பாடு செய்தார். அதையடுத்து, ஒரு மணி நேரத்தில் மாலை 4.30 மணியளவில் வாகன போக்குவரத்து சீரானது. மேலும், திருச்சியிலிருந்து வரும் கனரக வாகனங்கள் உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார், எலவனாசூர்கோட்டை, திருக்கோவிலுார், திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சேலம், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த கனரக வாகனங்களும் எலவனாசூர்கோட்டை, திருக்கோவிலூர் வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. நேற்று இரவு வரை, வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால், உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் கட்டணமின்றி வாகனங்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.