உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பழனிசாமி வருகையால் தொண்டர்கள் புத்துணர்ச்சி

பழனிசாமி வருகையால் தொண்டர்கள் புத்துணர்ச்சி

சின்னசேலத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்ற பிறகு தொண்டர்கள் மத்தியில் புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது.சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகளில் தி.மு.க., தீவிரம் காட்டி களத்தில் இறங்கியுள்ளது. பிரதான எதிர் கட்சியான அ.தி.மு.க., சற்று தொய்வடைந்த நிலையில் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் கடந்த லோக்சபா தேர்தலில் மாவட்ட செயலாளர் குமரகுரு கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனதே ஆகும்.இந்நிலையில் பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு ஏற்பாட்டின் பேரில் தியாகதுருகத்தில் 2,671 பெண்கள் பங்கேற்ற பால்குடம் ஊர்வலம் கட்சியினரிடையே புத்துணர்வை கொடுத்துள்ளது.தொடர்ந்து சின்னசேலத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் நடந்த விழாவில் பொதுச் செயலாளர் பழனிசாமி, 126 அடி உயர பிரம்மாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து 5,771 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ஆளுங்கட்சியான தி.மு.க., மட்டுமே பிரம்மாண்ட கட்சி நிகழ்வுகளை நடத்தி வந்த நிலையில், தற்போது தமிழகத்தையே திரும்பிப் பார்க்கும் வகையில் அடுத்தடுத்து அ.தி.மு.க., சார்பில் மாவட்டத்தில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தொண்டர்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.எதிர்வரும் சட்டசபை தேர்தல் வரை தொய்வடையாமல் கொண்டு சென்று வெற்றிக்கனியை கைப்பற்ற கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ