உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எஸ்.பி., அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் எப்போது? நிதி ஒதுக்கீடு செய்தும் துவங்காத பணிகள்

எஸ்.பி., அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் எப்போது? நிதி ஒதுக்கீடு செய்தும் துவங்காத பணிகள்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் இயங்கி வருகிறது. மாவட்டம்துவங்குவதற்கு முன்பாகவே நவம்பர் 18ம் தேதி எஸ்.பி., அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது மாவட்டத்தின் எஸ்.பி.,யாக ரஜத்சதுர்வேதி பணிபுரிந்து வருகிறார். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், 3 அனைத்து மகளிர் காவல் நிலையம், 3போக்குவரத்து காவல் நிலையம், 3 மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களைக் கொண்டுள்ளது.எஸ்.பி., தலைமையின் கீழ் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 10 டி.எஸ்.பி.,க்கள், 23 இன்ஸ்பெக்டர்கள், 86 சப் இன்ஸ்பெக்டர்கள்உட்பட மொத்தம் 1,398 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.அதேபோல் எஸ்.பி., அலுவலகத்தில், இயங்கக்கூடிய தனிப்பிரிவு அலுவலகம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், விரல் ரேகை பிரிவு கூடம், தடயம் சேகரிப்பு, தொழில் நுட்ப பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.தற்போது தச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லுாரியில் வாடகை கட்டணத்தில் தற்காலிகமாக எஸ்.பி.,அலுவலகம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிகழகம் மூலம் எஸ்.பி., அலுவலகத்திற்கான நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு 12 கோடியே 13 லட்சம் ரூபாய் கடந்தஓராண்டுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.வீரசோழபுரத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்டநீதிமன்ற வளாகம், சி.இ.ஓ., அலுவலகம் போன்ற அலுவலகங்கள் ஒருங்கிணைந்து கட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. அவ்விடத்தில் கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில்வழக்கால் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின் கோர்ட் மூலம் தீர்வுகாணப்பட்டு, கடந்த சில மாதங்களாக கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் தற்போது தொடர்ந்து நடந்துவருகிறது.இதற்கிடையே கலெக்டர் அலுவலக கட்டடம் அருகே எஸ்.பி., அலுவலகத்திற்கான நிரந்தர கட்டடம் கட்டுவதற்குவீரசோழபுரத்தில் இடம் தேர்வு செய்து, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுகாவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை