பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வெயில் மழையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் விபத்து, கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய மொபட், பைக் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் . அவைகள் வெயில், மழையில் துருப்பிடித்து வீணாவதை தடுக்கும் வகையில் ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களில் அந்தந்த பகுதிகளில் விபத்து, கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்களை வெளிப்புறத்தில் நிறுத்தி வைப்பதால் மக்கிப்போய், யாருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது. எனவே, காவல் நிர்வாகம் பறிமுதல் வாகனங்களை விரைவில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.