உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு ஆண்கள் பள்ளியில் இயங்கும் பதிவு அலுவலகம் மாற்றப்படுமா?

அரசு ஆண்கள் பள்ளியில் இயங்கும் பதிவு அலுவலகம் மாற்றப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் இயங்கி வரும் பதிவு அலுவலகத்தை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நபார்டு வங்கியின் நிதியில் புதிதாக, 20க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால், அதற்கு பிறகு அந்த புதிய கட்டடத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம், தோட்டக்கலை, பதிவு, பொதுப்பணித்துறை மற்றும் ஆதார் பதிவு மையம் போன்ற பிற துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கின.இதனால் பள்ளி மாணவர்கள் போதிய வகுப்பறைகள், கழிவறை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு, பல்வேறு துறை அலுவலகங்கள் வேறிடத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் அங்கு இயங்கி வரும் பதிவுத்துறை பதிவேடு அறை மட்டும் இன்னும் மாற்றப்படாமல், அங்கேயே இயங்கி வருகிறது. அத்துடன் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், மாவட்டம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வைக்கும் குடோனாக, பள்ளியின் கொட்டகை மற்றும் இரண்டு வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கோடை விடுமுறை முடிந்து வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படும் முன், வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் காலி செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல் பள்ளியில் இயங்கும், பதிவு அலுவலக பதிவேடு அறையையும், வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை