உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்துகள்: 2 பேர் பலி

சாலை விபத்துகள்: 2 பேர் பலி

செங்கல்பட்டு : வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், இருவர் இறந்தனர். செங்கல்பட்டு அடுத்த பழவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன் சகாரிய ஆனந்தகுமார், 19. இவர், மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், பழவேலியிலிருந்து, சுசுகீ மோட்டார் சைக்கிளில் (பதிவு எண்: டி.என். 05 டி/ 2336) செங்கல்பட்டுக்கு சென்றார். பகல் 12.30 மணிக்கு பழவேலி நெடுஞ்சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார், விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து: அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு காலனியைச் சேர்ந்தவர் சின்னபையன், 48, விவசாயி. நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணிக்கு, சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள், மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவர், வழியிலேயே இறந்தார். இதுகுறித்து, அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி : செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை அருகில், அளவுக்கதிகமாக மதுபானம் குடித்தவர் இறந்தார். செங்கல்பட்டு அடுத்த, மலையம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 50. கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம், பழவேலியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு, மாலை 6 மணிக்கு அளவுக்கு, அதிகமாக மதுபானம் குடித்து, மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அருகில் இருந்தவர்கள், இரவு 9 மணிக்கு அவரை எழுப்பி பார்த்தனர். அப்போது, அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை