உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கும்மிடி தடத்தில் நாளை 25 மின்சார ரயில்கள் ரத்து

கும்மிடி தடத்தில் நாளை 25 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், நாளை 25 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனl சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 8:05, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறதுl சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 8:35, 10:15, மதியம் 1:05, நண்பகல் 12:10 கும்மிடிப்பூண்டிக்கு காலை 9:00, 9:30, 10:30, 11:35, கடற்கரை - கும்மிடிப்பூண்டி காலை 9:40, பகல் 12:40 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறதுl சூலுார்பேட்டை - நெல்லுார் மாலை 3:50, சென்ட்ரல் - ஆவடி இரவு 11:40, கும்மிடிப்பூண்டி - கடற்கரை காலை 10:55, காலை 11:25 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது l கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் பகல் 12:00, மதியம் 1:00 2:30, பிற்பகல் 3:15 மணி சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 11:45, மதியம் 1:15, மாலை 3:10, இரவு 9:00, நெல்லுார் - சூலுார்பேட்டை பிற்பகல் 6:45 மணி ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது

ஒரு பகுதி ரத்து

l செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி காலை 9:55 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும் l கும்மிடிப்பூண்டி - தாம்பரம் மாலை 3:00 மணி ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

சிறப்பு ரயில்கள்

l சென்ட்ரல் - பொன்னேரிக்கு காலை 9:00, காலை 10:30, எண்ணுாருக்கு காலை 9:30, மீஞ்சூருக்கு முற்பகல் 11:35 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்l கடற்கரை - பொன்னேரிக்கு பகல் 12:40, பொன்னேரி - சென்ட்ரலுக்கு முற்பகல் 11:42, மதியம் 1:18, பிற்பகல் 3:33 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்l எண்ணுார் - சென்ட்ரல் நண்பகல் 12:43, மீஞ்சூர் - சென்ட்ரல் பிற்பகல் 2:59 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று 50 சிறப்பு பஸ் இயக்கம்

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, புதிய ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் இன்று நடக்கின்றன. இதனால், இந்த தடத்தில் வழக்கமான மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், கோடம்பாக்கம் - தாம்பரம் மற்றும் தாம்பரம் - செங்கல்பட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.எனவே, இந்த தடத்தில் பயணியர் நலனை கருத்தில் வைத்து தாம்பரம் - பிராட்வே தடத்தில் - 25, கிளாம்பாக்கம் - பிராட்வே - 20, பல்லாவரம் - செங்கல்பட்டு - 5 என, 50 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.பயணியரின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதான பேருந்து நிலையங்களில், அலுவலர்களை நியமித்து பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என, மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ