சிறைக்குள் காவலருடன் தகராறு நிர்வாணமாகி திருநங்கை ரகளை
புழல் : சென்னை அண்ணா நகர் -சத்யா நகரைச் சேர்ந்தவர் ராபர்ட் என்ற சின்ன ராபர்ட், 28. கொலை மிரட்டல் வழக்கில், அண்ணா நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த ஜூலை 24ல் சிறையில் அடைக்கப்பட்டார்.புழல் சிறையில் உள்ள ராபர்ட்டை சந்திப்பதற்காக அவரது மனைவி திருநங்கை சஞ்சனா மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேர், நேற்று காலை 9:00 மணி அளவில் புழல் சிறைக்கு வந்திருந்து,'மனு கொடுத்து டோக்கன் வாங்கினர். அவர்களுக்கு பிற்பகல் 2:30 மணிக்கு நேரம் ஒதுக்கி அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.ஆனால், சஞ்சனா உள்ளிட்ட மூன்று பேரும் குறித்த நேரத்திற்கு வராமல், காலதாமதாக வந்த தால், மூவரையும் வரிசையில் நிற்குமாறு சிறைக்காவலர் கிருபாகரன் கூறினார்.இதனால், காவலரிடம் திருநங்கை சஞ்சனா உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்துள்ளனர். திடீரென சஞ்சனா, தன் உடைகளை முழுதுமாக களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதையடுத்து சிறைக் காவலர்கள் விரைந்து, மூவரிடமும் பேச்சு நடத்தினர். தகவல் அறிந்த புழல் போலீசார், சம்பவ இடம் விரைவதற்குள், சஞ்சனா அங்கிருந்து தப்பி ஓடினார். தகராறில் ஈடுபட்ட மூவர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சஞ்சனாவை போலீசார் தேடி வருகின்றனர்.