இடைநின்ற பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு பயிற்சி முகாம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, எல்.எண்டத்தூர் கிராமத்தில், காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில், இடைநின்ற பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடந்தது.அதில், எல்.எண்டத்தூர், ஆலப்பாக்கம், பாப்பாநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்கு, கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் குழந்தைகள் மேற்பார்வையாளர் ராஜி, கிராம சுகாதார செவிலியர் மற்றும் பலர் பங்கேற்றனர்.