மேலும் செய்திகள்
வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சீரமைப்பு
21 hour(s) ago
படப்பை பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்துள்ள பைக், லாரிகள்
21 hour(s) ago
காஞ்சியில் பாரா வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி
21 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் மஞ்சள் நீர் கால்வாய், கடந்த ஆண்டு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாரி சீரமைக்கப்பட்டது.இதில், ஆனந்தாபேட்டை, ரெட்டிபேட்டை, திருக்காலிமேடு பிரதான சாலை அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதியில் துார்வாரிய கழிவுகளை கால்வாய் தடுப்புச்சுவர் ஓரம் போட்டனர். கழிவுகளை முறையாக அகற்றவில்லை. இதனால், கழிவுகள் குப்பை குவியலாக உள்ளன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், திருக்காலிமேடு அருந்ததியர் நகர் பகுதியில் உள்ள குப்பை கழிவுகள் சரிந்து, பெரிய வேப்பங்குளத்தில் இருந்து மஞ்சள்நீர் கால்வாய்க்கு உபரிநீர் வரும் கால்வாயில் விழுந்துள்ளது. இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, ஆனந்தாபேட்டை, ரெட்டிபேட்டை, திருக்காலிமேடு பிரதான சாலை, அருந்ததியர் நகர் பகுதியில் மஞ்சள் நீர் கால்வாய் துார்வாரிய கழிவுகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago