உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிக்கராயபுரம் கல் குவாரியில் குப்பை கொட்டி எரிப்பு

சிக்கராயபுரம் கல் குவாரியில் குப்பை கொட்டி எரிப்பு

குன்றத்துார், குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில், 23 கல் குவாரிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், 300 -- 400 அடி ஆழம் கொண்டவை.செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாத நேரத்தில், இந்த கல் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்குவர். இந்த, 23 கல் குவாரிகளையும் ஒருங்கிணைத்து, நீர்த்தேக்கமாக மாற்ற, அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சிக்கராயபுரம் அருகில் உள்ள கொல்லச்சேரி ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, இந்த குவாரியை சுற்றி கொட்டி, இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கப்படுகிறது.இந்த கழிவு, குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் கலப்பதால் மாசு ஏற்படுகிறது. குப்பை கொட்டி எரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை