உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிரிக்கெட் போட்டி காஞ்சி அணி வெற்றி

கிரிக்கெட் போட்டி காஞ்சி அணி வெற்றி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் 'ட்ரீம் லெவென்ஸ்' கிரிக்கெட் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, களக்காட்டூர், பெரியநத்தம், வேடல், மேல்பேரமநல்லுாரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் தொடர் நடந்தது.இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. களக்காட்டூரில் நடந்த இறுதி போட்டியில், காஞ்சிபுரம் 'ட்ரீம் லெவென்ஸ்'அணியும், திருவள்ளூர் பாலாஜி லெவென்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற காஞ்சிபுரம் 'ட்ரீம் லெவென்ஸ்' அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து 6 ஓவர்களுக்கு 46 ரன்கள் எடுத்தனர். பின், திருவள்ளூர் பாலாஜி லெவென்ஸ் அணியினர் 6 ஓவருக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தனர். காஞ்சிபுரம் அணியினர் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.இதில், வெற்றி பெற்ற காஞ்சிபுரம் 'ட்ரீம் லெவென்ஸ்' அணியினருக்கு முதல் பரிசாக, 20,000 ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக திருவள்ளூர் பாலாஜி லெவென்ஸ் அணியினருக்கு 15,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக பெரிய நத்தம் எப்.சி.சி., அணியினருக்கு 8,000 ரூபாயும், நான்காவது பரிசாக ஆக்கூர் விஜய் பிரதர்ஸ் அணியினருக்கு 5,000 ரூபாயும், ஐந்தாம் பரிசாக கடல்மங்கலம் வரதன் அணியினருக்கு 3,000 ரூபாயும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை