உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தென்னிந்திய உதாசின் மடாதிபதி கர்ஷிணி சுவாமிஜி அருளாசி

தென்னிந்திய உதாசின் மடாதிபதி கர்ஷிணி சுவாமிஜி அருளாசி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி ஸ்ரீகர்ஷிணி அனுபவானந்த் மகராஜ் சுவாமிக்கு, உத்திரபிரதேச மாநிலம், ப்ரயாக்ராஜ் கும்பமேளாவில், தென்னிந்திய உதாசின்பாவாஜி மடங்களின் தலைமை மடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.இதையொட்டி, பாராட்டு விழா, காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், துாசி நத்தக்கொல்லை சுவாமி கீதானந்த ஹனுமன் மாதாஜி, நாராயணகுரு சேவாஸ்ரம யோகானந்த தீர்த்த சுவாமிகள், பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் அருண்குமார் வாழ்த்துரை வழங்கினர்.இதில், மடாதிபதி ஸ்ரீகர்ஷிணி அனுபவானந்த் மகராஜ் சுவாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை