மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை
06-Aug-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை ஒற்றைவாடை தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்தையொட்டி இன்று, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோபூஜை உள்ளிட்டவையும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து ஹோமம், யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சமர்ப்பணம் உள்ளிட்டவையும் நடக்கிறது.நாளை, காலை 6:30 மணிக்கு கலசம் புறப்பாடும், 6:45 மணிக்கு விமானத்திற்கும், தொடர்ந்து செல்வ விநாயகருக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8:00 மணிக்கு மஹா அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது.காலை 9:00 மணிக்கு காஞ்சிபுரம் திருவண்ணாமலை கிரிவலக் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்வும், மாலை 4:00 மணிக்கு வடமாவந்தல் ஏ.என்.ஆர். கலை கல்லுாரி முதல்வர் முனைவர் ராமு, ஆனைமுகனின் அற்புதங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார்.இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் விநாயகப் பெருமான் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
06-Aug-2024