உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயணியரிடம் மொபைல் பறித்தவர் கைது

பயணியரிடம் மொபைல் பறித்தவர் கைது

செங்கல்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து, செய்யாறு செல்ல காஞ்சிபுரம் பேருந்தில் ஏறினார்.செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் வந்த போது, மர்ம நபர் ஒருவர் அபுபக்கரின் மொபைல் போனை திருடிக்கொண்டு, பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார்.அபுபக்கர் கூச்சலிட்டதையடுத்து, பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியதும், சக பயணியர் அந்த நபரை மடக்கி பிடித்து, செங்கல்பட்டு நகர போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிபட்ட நபர், ஆந்திர மாநிலம், கோதாவரி பகுதியை சேர்ந்த ஜல்தாலாலு, 39, என்பதும் செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கவனத்தை திசை திருப்பி, மொபைல் போன் திருடி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து, ஜல்தாலாலுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை