உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய வில்வித்தை போட்டி: சென்னை சிறுமி தேர்வு

தேசிய வில்வித்தை போட்டி: சென்னை சிறுமி தேர்வு

சென்னை: தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், 18வது மாநில அளவிலான வில்வித்தை போட்டி, தாம்பரம் அருகில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.சென்னை, திருவள்ளூர் உட்பட மாநிலம் முழுதும் இருந்து, 1,000 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.இதில், இந்தியன் போ, இந்தியன் ரிகர்வ் மற்றும் காம்பவுண்டு ஆகிய மூன்று பிரிவுகளில், பல்வேறு வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில், அடையாறு கேந்திரிய வித்யாலயா சி.எல்ஆர்.ஐ., பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி சங்கமித்ரா, 12, பங்கேற்று, தலா ஒரு தங்கம், வெண்கலம் மற்றும் நான்கு வெள்ளியுடன், ஆறு பதக்கங்களை வென்றார்.இந்த வெற்றியால், இம்மாதம் ஆந்திராவில் நடக்கவுள்ள தேசிய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை