புத்த பூர்ணிமா விழா
காஞ்சிபுரம் ;காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள, காஞ்சி புத்தர் கோவிலில், நேற்று புத்த பூர்ணிமா விழா நடந்தது.விழாவையொட்டி நேற்று, காலை 9:15 மணிக்கு பிக்கு போதி அம்பேத்கர் பிக்கு பவுத்தம் பாலா தலைமையில், பகவான் புத்தர் சிலையுடன் ஊர்வலம் நடந்தது.தொடர்ந்து தி.மு.க.,- எம்.பி. செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் உலக அமைதிக்கான பவுத்த கொடி ஏற்றினர்.புனித பவுத்த ஸ்துாபி, போதி மரம், மணிமேகலை மற்றும் போதி தர்மருக்கு மரியாதையும், புத்த வந்தனம் மற்றும் தியானம் நடந்தது. வர்மக்கலை, குங்ஃபூ, கராத்தே பயிற்சி கலை நிகழ்ச்சி நடந்தது. பிக்குகளுக்கு சங்க தானம், மாலை நேர வந்தனம் மற்றும் தியானம் நடந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காஞ்சி புத்தர் கோவில் தலைவர் திருநாவுக்கரசு, செயலர் நாகராஜன், பொருளாளர் கவுதமன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.