உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுநீர் கழிப்பிடமான பேருந்து நிலையம் துர்நாற்றத்தால் பயணியர் அவதி

சிறுநீர் கழிப்பிடமான பேருந்து நிலையம் துர்நாற்றத்தால் பயணியர் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தாம்பரம் செல்லும், தடம் எண் 79 அரசு பேருந்துகள் நிற்கும் இடத்தின் எதிரில், உடமைகள் பாதுகாப்பு அறை அருகில் உள்ள காலி இடத்தை, பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வோர் சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, பேருந்து நிற்குமிடத்தில் சிறுநீர் வழிந்தோடுவதால், சிறுநீரில் நடந்து செல்லும் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அருகில், தாம்பரம் செல்லும் பேருந்துகளுக்கான டைம் கீப்பர் அலுவலத்திற்கு வந்து செல்லும் டைம் கீப்பர், உதவி பொறியாளர், டிரைவர், கண்டக்டர் என, போக்குவரத்து ஊழியர்களும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ள இடத்தை சீரமைத்து, அப்பகுதியில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வகையில், காலி இடத்தில், அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான ஓய்வு அறை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை