காஞ்சி - திருப்பருத்திகுன்றம் மினி பேருந்து இயக்க மனு
புத்தேரி, காஞ்சிபுரத்தில் இருந்து புத்தேரி கிராமம் வழியாக,திருப்பருத்திகுன்றத்திற்கு மினி பேருந்து இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் வெங்கடேசன்,காஞ்சிபுரம் மண்டல அரசு போக்குவரத்துகழகத்திற்கு அனுப்பியுள்ள மனு விபரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மினி பேருந்து சேவைக்கு விரிவான திட்டம் குறித்து,வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, கச்சபேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், மிஸ்ரிநகர்,புத்தேரி, சாலபோகம், பிள்ளையார்பாளையம்.மேலும், திருப்பருத்திகுன்றம், மூங்கில் மண்டபம் மண்டபம் வழியாக, மீண்டும் காஞ் சிபுரம் நிலையத்திற்கு செல்லும் வகையில், மினி பஸ் சேவையை துவக்க அரசு போக்குவரத்து கழகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.